உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சொல்ல விரும்பவில்லை என மீண்டும் சொல்லிய டிரம்ப் | Trump Speech | Qatar | US | Ceasefire

சொல்ல விரும்பவில்லை என மீண்டும் சொல்லிய டிரம்ப் | Trump Speech | Qatar | US | Ceasefire

இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவிய மோதல் சென்ற வாரம் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வேண்டுகோளை தொடர்ந்து, போர் நிறுத்தம் உருவானது. இது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் நபராக அறிவித்தார். அப்போது இருந்து இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு கொண்டு வந்தது நான் தான் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக கூறினார். இந்த சூழலில் கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமான தளத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய டிரம்ப் பேசியதாவது, நான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் சென்ற வாரம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையைத் தீர்க்க நான் உதவினேன். இரு தரப்பிற்கும் இடையே மோதல் மேலும் மேலும் அதிகரித்து வந்த சூழலில் அதை முடிவுக்குக் கொண்டு வர முயன்றேன். பல வகை ஏவுகணைகள் பாயத் தொடங்கி பதற்றம் அதிகரித்த சூழலில் நாங்கள் அதை தீர்த்து வைத்தோம். மோதல் வேண்டாம், நாம் வர்த்தகம் செய்வோம் என்றேன். இரு நாடுகளுக்கும் அது மகிழ்ச்சி. அந்த பிரச்னை முடிவுக்கு வந்ததாகவே நான் கருதுகிறேன். இருவருக்கும் இடையே பல காலமாக மோதல் இருக்கிறது. நான் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்க முடியும் என்பதைச் சொன்னேன். இதன் மூலமாகவே அவர்கள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என கூறி உள்ளார். மீண்டும் சொல்ல விரும்பவில்லை என கூறினாலும், இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வர நான் தான் காரணம் என டிரம்ப் சொல்வது இது ஆறாவது முறை

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !