உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க நிபுணர்கள்; மாஜிக்கள் எதிர்ப்பு Trumps tariffs |ex us nsa john|Bolton |

டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க நிபுணர்கள்; மாஜிக்கள் எதிர்ப்பு Trumps tariffs |ex us nsa john|Bolton |

அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார கொள்கை தவறானது; வரி விதிக்கும் முடிவுகள் குப்பைக்கு சமமானது என்று அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறியுள்ளார். அதிபர் டிரம்பின் திட்டங்கள் நிலையற்றவை, அவை விரைவில் சரிந்துவிடும். அது தன்னை தானே அழித்து கொள்வதற்கு சமம். எனவே, பிரதமர் மோடியும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும் அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் அதிபர் டிம்ப் முடிவை எதிர்க்கிறார். ரஷ்யா, சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்கி, அமெரிக்காவின் நட்பு நாடாக்க, பல ஆண்டுகளாக நடந்த முயற்சிகளை டிரம்பின் நடவடிக்கை பாழாக்குகின்றன. சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடும், இந்தியாவுக்கு எதிரான கடுமையான வரிகளும் மிகப் பெரிய தவறு.

ஆக 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ