அமெரிக்காவை நேசிக்காதவர்கள் வெளியேற்றப்படுவர்: டிரம்ப் சபதம் Trump|Third World Countries
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை உள்ளது. இது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். அங்கு, தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 26ம் தேதி அங்கு வந்த ஒரு இளைஞன், பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களை நோக்கி சுட்டான். ஒரு பெண் அதிகாரி இறந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது நிலையும் சீரியசாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவரை பாதுகாப்புப்படையினர் சுட்டு பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவனின் பெயர் ரஹ்மானுல்லா லகான்வால்(Rahmanullah Lakanwal) என தெரிய வந்தது. 29 வயதான அந்த இளைஞர் 2021ல் பைடன் ஆட்சிக்காலத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து, அகதியாக அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார்.