/ தினமலர் டிவி
/ பொது
/ விஜய் பிறந்தநாளுக்கு பேனர் வைத்ததில் தவெக - திமுகவினரிடையே தகராறு! | TVK | DMK | Ulundurpet
விஜய் பிறந்தநாளுக்கு பேனர் வைத்ததில் தவெக - திமுகவினரிடையே தகராறு! | TVK | DMK | Ulundurpet
விஜய் பிறந்த நாளை ஒட்டி ரிஷிவந்தியம் கெடிலம் கூட்ரோடு பகுதியில் தவெக நிர்வாகிகள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர். அந்த இடத்தில் பேனர் வைக்கக் கூடாது என திமுகவினர் கூறியதாக தெரிகிறது. நள்ளிரவில் அந்த பேனரை திமுகவினர் கிழித்துள்ளனர். தட்டி கேட்டதால் திமுக மற்றும் தவெகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திமுகவை சேர்ந்த உளுந்தூர்பேட்டை ஊராட்சி தலைவர் ராஜவேல் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தவெகவை சேர்ந்த சரவணன் மற்றும் ஜெயமனியின் மண்டை உடைந்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். ரிஷிவந்தியம் போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.
ஜூன் 22, 2025