தவெக மாநாட்டு திடலில் அதிர்ச்சி சம்பவம் | TVK | TVK Maanadu
தவெகவின் 2வது மாநில மாநாடு அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நாளை மதுரை பாரப்பத்தி பகுதியில் நடக்க உள்ளது. முழு வீச்சில் இன்று தொண்டர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாநாட்டின் முகப்பு பகுதியில் 100 அடிஉயர கொடி கம்பம் நடும் பணி நடந்தது. கிரேன் உதவியுடன் கம்பத்தை தூக்கி நிறுத்தி வைத்து இருந்தனர். பணியின் போது திடீரென கிரேனில் இருந்து ரோப் அறுந்து விழுந்தது. கொடிக்கம்பம் மொத்தமாக சரிந்து எதிர் திசையில் விழுந்தது. அதன் அருகே நின்று கொண்டிருந்த தொண்டர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
ஆக 20, 2025