உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்!

முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை அரசு மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் விஜய் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைகிறது. இதையொட்டி, கடந்த 100 நாட்களில் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை பட்டியலிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பதவியேற்பின்போது ஊழல் மற்றும் லஞ்சத்தை சகித்துக் கொள்ள மாட்டேன் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாயிகளுக்காக சிறப்பு தொகுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பத்திரப்பதிவுத்துறையில் முறைகேடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்புக்காக தனிப்படை அமைக்கப்பட்டது. குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134 கோடி சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகளும் நடத்தப்பட்டன. மத்திய அரசுடன் பேசி ஜல்ஜீவன் 2.0 திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களையும் தொகுத்து அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர். 100 நாட்கள் நிறைவையொட்டி, இந்த சாதனைகளை துறை வாரியாக தொகுத்து அரசு தரப்பில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #முதல்வர்விஜய் #விஜய் #Vijay #TVK #தமிழகவெற்றிக்கழகம் #விஜய்அரசு #100நாட்கள் #100Days #TamilNadu #தமிழ்நாடு #TamilNaduPolitics #தமிழகஅரசியல் #தமிழ்அரசியல் #தமிழகஅரசு #அரசுதிட்டங்கள் #அரசுசாதனைகள் #விவசாயிகள் #மின்சாரம் #TASMAC #அம்மாஉணவகம் #TamilNews #TamilNewsToday #PoliticalNews #TVKNews #Dinamalar

ஆக 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி