உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவெகவுக்கு 25% ஓட்டு கிடைக்க வாய்ப்புள்ளதாக சர்வேயில் தகவல்! TVK | Congress | VC | Communist

தவெகவுக்கு 25% ஓட்டு கிடைக்க வாய்ப்புள்ளதாக சர்வேயில் தகவல்! TVK | Congress | VC | Communist

ரகசிய பேச்சு நடத்தும் விஜய் ஆதரவு தயாரிப்பாளர்! காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசி, மதிமுகவுக்கு குறி! த.வெ.க. கூட்டணிக்கு வருபவர்களுக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என, அக்கட்சி தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கூட்டணி ஆட்சி பற்றிய விவாதம் துவங்கி இருக்கிறது. சமீபத்தில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என கூறி சென்றார். இதையடுத்து தி.மு.க. கூட்டணியிலும் அந்த குரல் ஒலிக்கத் துவங்கி உள்ளது. தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என, தமிழக காங்கிரசிலும் சிலர் உரத்த குரலில் பேசி வருகின்றனர். கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். கூட்டணி ஆட்சி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க, ஈரோட்டில் வரும் 22ல் பொதுக்குழுவை கூட்டுகிறார் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இம்முறை கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம்; அதை வலியுறுத்தி தி.மு.க.விடம் தொகுதிகளை கேட்போம் என, தி.மு.க. தலைமைக்கு திடீர் நெருக்கடி கொடுத்து வருகிறது. அதாவது, தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க.வை தவிர, மற்ற கட்சிகள் எல்லாமே கூட்டணி ஆட்சி கோஷத்தை வலியுறுத்த துவங்கி உள்ளன.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை