உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவாக முக்கிய புள்ளி ஓட ஓட வெட்டி சரிப்பு-அதிர்ச்சி|tvk velmurugan party leader case|crime case

தவாக முக்கிய புள்ளி ஓட ஓட வெட்டி சரிப்பு-அதிர்ச்சி|tvk velmurugan party leader case|crime case

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை அருகே உள்ள சொங்கோட சிங்கனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி சங்கர் வயது 35. தமிழக வாழ்வுரிமை கட்சியின் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருந்து வந்தார். பன்றி வளர்ப்பு தொழிலும் செய்து வந்தார். இதற்காக உலகம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் இடத்தை வாடகைக்கு எடுத்து பன்றி பண்ணை அமைத்திருந்தார். இன்று வழக்கம் போல் பண்ணைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், ரவிசங்கரிடம் வாக்குவாதம் செய்தனர். கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரவிசங்கரை வெட்ட பாய்ந்தனர். உயிர் பிழைக்க அங்கிருந்து ரவிசங்கர் ஓட்டம் பிடித்தார். ரோட்டில் அவரை துரத்தி சென்ற ஆசாமிகள், ஓட ஓட வெட்டினர். கை, முதுகு, தலை பகுதிகளில் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே ரவிசங்கர் சரிந்து விழுந்தார். ஆசாமிகள் 2 பேரும் பைக்கில் தப்பி சென்றனர். அக்கம்பக்கத்தினர், ரவிசங்கரை மீட்டு ராயக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தீவிர விசாரணையில் களம் இறங்கினர். பன்றி வளர்ப்பு தொழிலில் ஏற்பட்ட பகை காரணமாக கொலை நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

செப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ