உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூர் சம்பவத்தை விசாரித்த அதிகாரி திடீர் மாற்றம்-பரபரப்பு karur stampede tvk vijay meeting stampede

கரூர் சம்பவத்தை விசாரித்த அதிகாரி திடீர் மாற்றம்-பரபரப்பு karur stampede tvk vijay meeting stampede

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின் போது, நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வரும் நிலையில், விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றே கரூர் சென்ற அருணா ஜெகதீசன் குழுவினர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த மக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். பின்னர் கரூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுபவர்களிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்தனர். இந்த நிலையில் இன்று 2வது நாளாக அருணா ஜெகதீசன் தலைமையிலான குழுவினர் இன்று விசாரணையை துவங்கினர். சம்பவம் நடந்த இடம் இருக்கும் பகுதியில் வசிப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களிடம் தொடர்ந்து சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர். ஒவ்வொருவர் கொடுக்கும் தகவல்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் பற்றி கரூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்திருந்தனர். விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் இருந்தார். இப்போது அவருக்கு பதிலாக, ஏஎஸ்பி பிரேமானந்தன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். #KarurStampede #TVKVijay #ArunaJagdeesan #groundreport #TVKVijayKarurStampede #StampedeAlert #KarurNews #BreakingNews #VijayUpdates #TamilNaduNews #SafetyFirst #EventSafety #TragicEvent #CrowdControl #Awareness #CommunitySupport #LocalNews #KarurUpdates #VijayCommunity

செப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை