/ தினமலர் டிவி
/ பொது
/ உதயகுமார் வைரல் வீடியோ; மாஜி MLA மகள் மீது புகார் | Udayakumar | ADMK | Palanisami | OPS
உதயகுமார் வைரல் வீடியோ; மாஜி MLA மகள் மீது புகார் | Udayakumar | ADMK | Palanisami | OPS
திமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கட்சி பொதுச்செயலர் பழனிசாமியை அவதுாறாக பேசியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆண்டிபட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்றால் நீயெல்லாம் என்ன தலைவர் என பேசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. வைரலான இந்த வீடியோவால் அதிமுகவினர் கொதிப்படைந்தனர். தனியார் டிவி வெளியிட்டது போல போலியாக சித்தரித்து அதை வைரலாக்கியது தெரிந்தது. இது தொடர்பாக மதுரை அதிமுக பிரமுகர் தமிழ்செல்வம், எஸ்பியிடம் நேற்று புகார் அளித்தார்.
அக் 25, 2024