உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 27 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்

27 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்

மிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு 2019ல் தேர்தல் நடந்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பின், எஞ்சிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு, 2021ல் தேர்தல் நடத்தப்பட்டது. 2019 உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 1.19 லட்சம் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிக்கிறது. நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி