உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலக நாடுகள் முன் பாகிஸ்தான் மூக்கை அறுத்த இந்தியா india vs pakistan | khyberpakhtunkhwa attack | ttp

உலக நாடுகள் முன் பாகிஸ்தான் மூக்கை அறுத்த இந்தியா india vs pakistan | khyberpakhtunkhwa attack | ttp

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது கூட்டம் சுவிட்ச்சர்லாந்தின் ஜெனிவா நகரில் துவங்கியது. அப்போது நடந்த விவாதத்தின் போது இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது. இதற்கு இந்தியா தரமான பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசி 30 பேரை அந்த நாட்டின் ராணுவம் கொலை செய்தது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி பாகிஸ்தானை கிழித்தார். அவர் பேசியது: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை. அதே நேரம் இந்தியாவை ஆத்திரமூட்டும் செயல் இது. அடிப்படை ஆதாரமற்ற தகவலை சொல்லி சபையை தவறாக வழிநடத்துவது பாகிஸ்தானுக்கு வாடிக்கையாக இருக்கிறது. இந்தியா பற்றி பேசுவதற்கு பதிலாக, சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் இந்திய பிரதேசத்தை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும்.

செப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி