/ தினமலர் டிவி
/ பொது
/ உங்களுடன் ஸ்டாலின் முகாம்: ஆவேசமாக கிளம்பிய பெண் | Ungaludan Stalin | TNgovt
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: ஆவேசமாக கிளம்பிய பெண் | Ungaludan Stalin | TNgovt
அரசின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரை முகாம்கள் மூலம் சுமார் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அடையார் கஸ்தூரிபாய் நகரில் உள்ள சமூக கூடத்தில் இன்று முகாம் நடந்தது. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
ஆக 01, 2025