உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக தலைமை வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு | Union Budget 2024 | DMK | Protest announced | TN level pr

திமுக தலைமை வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு | Union Budget 2024 | DMK | Protest announced | TN level pr

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டில்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்க உதவ வேண்டும். ஆனால் இந்த ஆண்டின் பட்ஜெட்டில், தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி