உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குண்டு வெடிப்பு கருத்தால் வெடித்தது சர்ச்சை Union Minister |Shobha Karandlaje |Apologises

குண்டு வெடிப்பு கருத்தால் வெடித்தது சர்ச்சை Union Minister |Shobha Karandlaje |Apologises

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச்சில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இது தொடர்பாக பேசிய கர்நாடகாவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, தமிழகத்தில் பயிற்சி பெறுபவர்கள்தான் இங்கு வந்து வெடிகுண்டுகளை வைக்கின்றனர் என்றார். மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் மதுரை நகர சைபர் கிரைம் போலீசில் ஷோபா மீது புகார் அளித்தார். அதனடிப்படையில், கலகத்தை தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் எப்ஐஆர் பதியப்பட்டது. அதனை ரத்து செய்ய கோரி ஷோபா கரந்தலாஜே சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மத்திய இணை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டால் அவர் மீதான வழக்கை கைவிட தமிழக அரசு தயாரா? என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கேட்டார். ஊடகம் முன் மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்டால் எப்ஐஆரை ரத்து செய்யலாம் என்று தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமன் தெரிவித்தார்.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி