பிரிட்டனை உலுக்கிய வலதுசாரிகள் போராட்டம்-வன்முறை | united kingdom | London protest | tommy robinson
குடியேறிகளே வெளியே போங்க பிரிட்டனில் வெடித்த போராட்டம்! லண்டனே குலுங்கியது இந்தியர்கள் கதி என்ன? அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்று பிரிட்டனிலும் மிகப்பெரிய போராட்டம் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வலதுசாரிகள் ஒன்றிணைந்து தலைநகர் லண்டனில் நடத்திய ஊர்வலம் மொத்த நாட்டையும் அதிர வைத்து விட்டது. தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் இந்த போராட்டம் துவங்கியது. Unite The Kingdom என்ற பெயரில் போராட்டத்தை டாமி முன்னெடுத்தார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பிரிட்டன் அரசை கண்டித்தும் பிரிட்டன் பிரதம் கெய்ர் ஸ்டார்மரை கண்டித்தும் கோஷம் போட்டனர். பிரிட்டனில் வெளிநாட்டினர் குடியேற அனுமதிக்க கூடாது; ஏற்கனவே குடியேறிய வெளிநாட்டினரை வெளியே அனுப்புங்கள் என்று முழங்கினர். பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர். ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் வலதுசாரிகள் திரண்டனர். வலதுசாரிகள் இவ்வளவு பேர் ஒன்று திரண்டு போராடுவது பிரட்டன் வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த போராட்டத்துக்கு எதிராக Diane Abbott, Zarah Sultana ஆகிய 2 எம்பிக்கள் அதே இடத்தில் போட்டி ஊர்வலம் நடத்தினர். அதிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இருதரப்பினரும் சில இடங்களில் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பயங்கர வன்முறை வெடித்தது. தடுக்க சென்ற போலீசுக்கும் அடி விழுந்தது. லண்டனில் உச்சக்கட்ட பதற்றம் தொற்றியது. முதல் கட்டமாக கலவரம் செய்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். பலரை போலீஸ் தேடுகிறது. பிரிட்டனில் இந்தியர்களும் கணிசமாக குடியேறி இருக்கின்றனர். லண்டன் போராட்டம், அவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.