உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாராசூட்டில் குதித்து உயிர் தப்பிய விமானி

பாராசூட்டில் குதித்து உயிர் தப்பிய விமானி

விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானம் நேற்று பஞ்சாபில் இருந்து பயிற்சிக்கு பறந்தது. உத்தரபிரதேசத்தின் ஆக்ரா நகரின் மேலே பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தை கைவிட நினைத்தார் பைலட். மக்கள் நடமாட்டம், வீடுகள் இல்லாத இடத்திற்கு விமானத்தை திருப்பினார். பாராசூட் உடன் வெளியே குதித்தார். கட்டுப்பாடு இல்லாத போர் விமானம் வானத்தில் குட்டிக்கரணம் அடித்தபடி வயலில் விழுந்து தீப்பிடித்தது. விமானம் பல்டி அடித்து வருவதையும், பாராசூட்டில் பைலட் இறங்குவதையும் அங்கிருந்தவர்கள் மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ