உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்காவின் முடிவுக்கு தடை கேட்ட பயங்கரவாதி

அமெரிக்காவின் முடிவுக்கு தடை கேட்ட பயங்கரவாதி

2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவன் சேர்ந்த தஹாவூர் ராணா. பாகிஸ்தானின் லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன். இப்போது அமெரிக்க சிறையில் இருக்கிறான். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இவனை ஒப்படைக்குமாறு இந்தியா, நீண்டகாலமாக அமெரிக்காவை கேட்டு வருகிறது. கடந்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்க சென்று இருந்தபோது, பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடுகடத்த அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தார். ராணாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ராணா மனுவை தாக்கல் செய்துள்ளான். அதில், இந்தியாவுக்கு நாடு கடத்தும் முடிவுக்கு தடை விதிக்க கேட்டுள்ளான். நான் ஒரு பாகிஸ்தான் முஸ்லிம். அந்நாட்டு ராணுவத்திலும் பணியாற்றி இருப்பதால், இந்தியாவில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் வாய்ப்பு உள்ளது.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !