அமெரிக்கர்களுக்கு டிரம்ப் பரபரப்பு மெசேஜ் | US vs China Canada Mexico | Trump tariff | US tax
உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது டிரம்பின் தடாலடியான வரி விதிப்பு அறிவிப்பு தான். அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் இந்த விவகாரம் பற்றி பேசி வந்தார். சீனா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் சகட்டுமேனிக்கு வரி விதிக்கின்றன. இதனால் அமெரிக்கா பாதிக்கப்படுகிறது. ஆனால் வரி விதிக்கும் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்கின்றன. இனி அமெரிக்கா தனது பொருளாதாரத்தை மேம்படுத்த, தனக்கு தீங்கு விளைவிக்கும் இந்த நாடுகளுக்கு அதிகபட்ச வரியை விதிக்கும் என்று தொடர்ந்து மிரட்டி வந்தார். அதிபர் ஆக பதவி ஏற்ற போதும் இதே எச்சரிக்கையை விடுத்தார். இப்போது செயல்படுத்தவே ஆரம்பித்து விட்டார். முதல் கட்டமாக அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோவுக்கு தலா 25 சதவீதம், சீனாவுக்கு ஏற்கனவே இருந்த வரியுடன் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்து அதிரடி காட்டி உள்ளார் டிரம்ப். பதிலுக்கு கனடாவும் 25 சதவீத வரியை அமெரிக்காவுக்கு விதித்தது. மெக்சிகோவும் பதிலடி கொடுப்போம் என்று அறிவித்துள்ளது. சீனாவோ, சர்வதேச வர்த்தக அமைப்பில் புகார் செய்வதோடு, அமெரிக்காவுக்கு வலிக்கும் நடவடிக்கையை எடுப்போம் என்று எச்சரித்துள்ளது. டிரம்பின் முதல் பட்டியலில் இந்தியா பெயர் இல்லை. விரைவில் டிரம்ப், மோடி சந்திப்பு நடக்க இருப்பதால், விவகாரத்தை பேசி தீர்த்து விடலாம் என்று டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க, டிரம்பின் நடவடிக்கையால் உலக நாடுகள் மட்டும் அல்ல; அமெரிக்கர்களே அச்சத்தில் உறைந்து விட்டனர். இப்படி சகட்டுமேனிக்கு நாடுகளுக்கு வரி விதிப்பதால், அமெரிக்காவில் பொருட்கள் விலை கணிசமாக உயரும்; தட்டுப்பாடு அதிகரிக்கும்.