உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா நடத்திய திடீர் அணு சக்தி ஏவுகணை சோதனை | Trump won | US Election | Minuteman III ICBM

அமெரிக்கா நடத்திய திடீர் அணு சக்தி ஏவுகணை சோதனை | Trump won | US Election | Minuteman III ICBM

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு பரபரப்பாக வெளியாகி கொண்டிருந்த நேரத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி வாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை அமெரிக்க ராணுவம் சோதனை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியே மாறிக்கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கா திடீரென ஏவுகணை சோதனை நடத்தியது ஏன்? அந்த ஏவுகணையின் சக்தி என்ன என்பதை பார்க்கலாம். அமெரிக்கா சோதித்து பார்த்த ஏவுகணையின் பெயர் Minuteman III ICBM. இது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை. இதனால் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்க முடியும். அமெரிக்க நேரப்படி ஓட்டுப்பதிவு நடந்த நவம்பர் 5ம் தேதி இரவு 11 மணி ஒரு நிமிடம் ஆன போது தான் இந்த சோதனையை அமெரிக்கா நடந்தியது. அந்த நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. டிரம்ப் தான் வெற்றியாளர் என்று கிட்டத்தட்ட உறுதி செய்திருந்த நேரம். கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளி படை தளத்தில் இருந்து பசிபிக் கடலை நோக்கி Minuteman III ஏவுகணையை அமெரிக்காவின் விமானப்படை, கடல்படை வீரர்கள் சேர்ந்து ஏவினர். அந்த ஏவுகணை 6750 கிமீ தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கியது. இதற்கு அரை மணி நேரம் எடுத்துக்கொண்டது. ஆனால் ஏவுகணை பறந்த போது அதில் மருந்து நிரப்பப்படவில்லை. Minuteman III ஏவுகணையின் உண்மையான வேகம் இதை விட அசுரத்தனமானது.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை