உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு உத்தராகண்ட் துணை நிற்கும் Uttrakhand | formation day | silver jubilee |

வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு உத்தராகண்ட் துணை நிற்கும் Uttrakhand | formation day | silver jubilee |

உத்தராகண்ட் மாநிலத்தின் 25-வது நிறுவன நாள் விழா டேராடூனில் இன்று நடந்தது. அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசி வாழ்த்து கூறினார். தேவ பூமியான உத்தராகண்டின் வெள்ளி விழா ஆண்டில் அம்மாநில மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அடுத்து வரும் பத்தாண்டுகள் உத்தராகண்டின் ஆண்டுகளாக இருக்கும். இம்மாநிலத்தின் ஜி.எஸ்.டி. பங்களிப்பு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மாநில வளர்ச்சியும் 1.25 சதவீதம் உயர்ந்துள்ளது. தனி நபரின் ஆண்டு சராசரி வருமானம் 2.6 லட்சமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் ஒளிமயமான அடுத்த 25 ஆண்டு பயணத்தை இப்போது நாம் தொடங்க வேண்டும். வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு வளர்ச்சி அடைந்த உத்தராகண்ட் துணையாக இருக்கும் என்பதை அடுத்த 25 ஆண்டில் இந்தநாடு பார்க்கும். உத்தராகண்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும். உங்கள் மொழிகள் மிகவும் வளமானது. அதை நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை