வடபழனி ஆண்டவர் கோயிலில் களை கட்டும் நவராத்திரி திருவிழா | Vadapalani Andavar Koyil Sakthi Golu
புராண இதிகாசங்களை விளக்கும் சக்தி கொலு வடபழனி ஆண்டவர் கோயிலில் நவராத்திரி திருவிழா கோலாகலம் சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில், நவராத்திரியை ஒட்டி பிரமாண்ட சக்தி கொலு திருவிழா கோலாகலமாக நேற்று துவங்கியது. பெண் பக்தர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி நவராத்திரி கொலுவை துவக்கி வைத்தனர். முதல் நாளான நேற்று அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றது. சிறுவர் - சிறுமியருக்கு ஆன்மிக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மரக் கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. பரத நாட்டியம், நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கொலு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வகை வகையான கொலு பொம்மைகளை பக்தர்கள் கண்டு ரசித்தனர். அம்மனின் பல வடிவங்கள் அதன் பெயர் விளக்கத்துடன் கொலுவில் இடம் பெற்றுளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அக். 1ம் தேதி வரை நடக்கும் நவராத்திரி விழாவில், தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் அம்மன் மற்றும் வகை வகையான கொலு பொம்மைகளை, தினமும் காலை 6.30 முதல் மதியம் 12.30 வரை மற்றும் மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரை பக்தர்கள் கண்டு களிக்கலாம்.