உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடங்கும் வைஷ்ணவி தேவி கோயில் திட்டம் | Vaishno Devi Temple | Rope Car

முடங்கும் வைஷ்ணவி தேவி கோயில் திட்டம் | Vaishno Devi Temple | Rope Car

வைஷ்ணோ தேவி மலைகோயிலுக்கு செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்துள்ளது. இப்போது வயதான பக்தர்கள் கோயிலுக்கு எளிதில் செல்வதற்காக 250 கோடியில் ரோப் கார் திட்டம் கொண்டு வர வைஷ்ணவி தேவி கோயில் வாரியம் முடிவு செய்தது. மலைப் பாதையில் 2.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் ரோப் கார் திட்டத்தால் கோயிலுக்கு 6 நிமிடத்தில் எளிதாக செல்ல முடியும். ஆனால் இது தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என வைஷ்ணவ தேவி மலைப் பாதையில் உள்ள வியாபாரிகள், சுமை தூக்குவோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரோப் கார் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த மத்திய ரிசர்வ் போலீஸார் மற்றும் காஷ்மீர் போலீஸாருடன், போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனம் மற்றும் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர்.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !