ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து வால்பாறைக்கும் வருகிறது இ-பாஸ்| E- Pass | Ooty | Kodaikanal | Valparai
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதிகளவு டூரிஸ்ட்கள் வருகை, வாகன நெரிசல் மற்றும் சுற்றுப்புறச்சூழலை மையமாக வைத்து இவ்விரு நகரங்களுக்கும் இ பாஸ் முறை ஏப்.1 முதல் நடைமுறையில் இருக்கிறது. ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் எத்தனை டூரிஸ்ட் வாகனங்களை அனுமதிக்கலாம் என சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு நடத்தி வருகின்றன. இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களின் இடைக்கால அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதி அறிக்கை டிசம்பரில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவுக்கு தேவையான தகவல்கள், ஆலோசனைகள் வழங்கும் வகையில் தலைமை செயலாளர் தலைமையில் விரைவில் கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட கோர்ட், அக்.31ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது. ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறை காரணமாக, வால்பாறைக்கு அதிக அளவில் டூரிஸ்ட்கள் செல்கின்றனர். அங்கும் இபாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் ஊட்டி, கொடைக்கானலை விட வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள் என கருத்து கூறினர். வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து நவ.1 முதல் இ பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என கூறி அடுத்தக்கட்ட விசாரணையை அக்.31க்கு தள்ளி வைத்தனர். #EPass | #Ooty | #Kodaikanal | #ValparaiEPass | #HighCourt | #IITChennai | #IIMBangalore