உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுத்தை தூக்கி சென்ற சிறுமிக்கு என்ன நேர்ந்தது

சிறுத்தை தூக்கி சென்ற சிறுமிக்கு என்ன நேர்ந்தது

ோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பச்சமலை எஸ்டேட்டில் ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்முண்டா- மோனிகாதேவி தம்பதி வேலை செய்கின்றனர். இவர்களது 5வயது மகள் ரோஸி குமாரி வீட்டின் பின்புறம் நின்று கொண்டு இருந்தாள். தாய் மோனிகா அங்கு தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை, தாய் கண்முன்னே குழந்தையை கவ்விக்கொண்டு காட்டுக்குள் ஓடியது. இதை பார்த்த தாய் கதறி அழுதார். சக தொழிலாளர்கள் கூச்சலிட்டபடி, சிறுத்தை சென்ற திசை நோக்கி ஓடினர். சிறிது தூரத்தில் சிறுமியின் ஆடைகள் மட்டும் கண்டெடுக்கப்பட்டன. வனத்துறையினர் சிறுமியை தேடும் பணியில் இறங்கினர். இரவு நேரம் என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை. வால்பாறையில் கடந்தாண்டு அக்டோபரில் இதே போல் ஒரு சிறுமியை சிறுத்தை கவ்வி சென்றது. தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்து இருக்கிறது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி