தேச பாதுகாப்பில் அரசியல் ராகுலுக்கு வானதி கண்டனம் Vanathi MLA | BJP | Rahul | Shashi Tharoor MP
தமிழக பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அறிக்கை: அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னதால் பாகிஸ்தான் மீதான தாக்குதலை பிரதமர் மோடி நிறுத்திவிட்டார் என்றும் 1971ல் அமெரிக்க அச்சுறுத்தலை மீறி இந்தியா பாகிஸ்தானை உடைத்தது என்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வரலாற்றை திரித்து பேசி இருக்கிறார். தனிநாடு கேட்டு போராடியவர்களுக்காக ராணுவத்தை இந்திரா அனுப்பிவைத்தார். அதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையோடு ஒப்பிடுவது மிகவும் தவறானது. வரலாறு குறித்த புரிதல் இல்லாதது. பாகிஸ்தானுக்கும் கிழக்கு வங்காளத்துக்கும் நிலம் வழி இணைப்பு இல்லாததால் இயல்பாகவே கிழக்கு வங்கத்தில் இருந்தவர்கள் தனி நாடு கேட்டு போராடினர். பாகிஸ்தானுக்கும் கிழக்கு வங்கத்துக்கும் நடந்த சண்டையில் கோடிக்கணக்கானவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அதை சமாளிக்க முடியாமல்தான், அப்போதைய பிரதமர் இந்திரா, போர் நடத்தி வங்க தேசம் உருவாக உதவி செய்தார். ஆனால், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் தாக்குதல் நடத்திய போதெல்லாம் காங்கிரஸ் அரசு எந்த பதிலடியும் கொடுக்கவில்லை. 2008ல் நடந்த மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 164 பேரை படுகொலை செய்தனர். அதற்கு கூட காங்கிரஸ் பதிலடி கொடுக்கவில்லை. வழக்கம் போல கண்டனம் மட்டும் தெரிவித்தது.