உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒன்றரை மணிநேரமாக தவித்த பயணிகள்

ஒன்றரை மணிநேரமாக தவித்த பயணிகள்

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டு இருந்தது. திருச்சிக்கு வந்தபோது, இடி மின்னல், சூறைக்காற்றுடன் கன மழை பெய்து கொண்டு இருந்தது. பாலக்கரை அருகே ரயில் வந்தபோது, திடீரென ரயில்வே லைனில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வந்தே பாரத் ரயில் வழியிலேயே நின்றது. திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே பவர் ஹவுசில் இடி தாக்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது. ரயில்வே ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஜங்ஷனில் இருந்து சென்ற டீசல் இன்ஜின், பாதி வழியில் நின்று கொண்டு இருந்த வந்தே பாரத் ரயிலை ஜங்ஷனுக்கு இழுத்து வந்தது.

மே 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை