கதவை தாண்டி வந்த கை: பதற வைக்கும் சம்பவம் | vaniyambadi | Police
திருப்பத்தூர் வாணியம்பாடியை சேர்ந்தவர் அருண், வயது 35. மனைவி அஸ்வினி, இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பெங்களூரில் கார் டிரைவராக வேலை செய்யும் இவர், வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். மற்ற நாட்களில் அஸ்வினி குழந்தைகளுடன் வீட்டில் தனியாக தான் இருப்பார். இதனை நோட்டமிட்ட ஆசாமி சில தினங்களுக்கு முன் அங்கு வந்துள்ளான். வீட்டு கதவை தட்டியுள்ளான். தனது அம்மாவாக இருக்கும் என நினைத்து அஸ்வினி கதவை திறந்துள்ளார்.
பிப் 27, 2025