வாணியம்பாடியில் சம்பவம்: நடந்தது என்ன? Vaniyambadi railway gate
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுனில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு கேட்கீப்பராக இருப்பவர் சுபாஷினி. இன்று காலை ரயில் வருவதற்காக ரயில்வே கேட்டை சுபாஷினி மூடினார். ரயில் போன பிறகு சிக்னல் விழுந்தது. ஆனாலும் கேட் திறக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 10 நிமிடம் காத்திருந்த வாகன ஓட்டிகள், அருகிலுள்ள கேட் கீப்பர் அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால், அலுவலகத்துக்கு வெளியே சற்று தள்ளி சுபாஷினி நின்றிருந்தார். ஏன் இன்னும் கேட்டை திறக்கவில்லை என வான ஓட்டிகள் கேட்டதும், பெரிய பாம்பு ஆபீஸ்க்குள்ள வந்துடுச்சி என பயத்துடன் சொன்னார்.
அக் 18, 2024