உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / VAO ஆபீஸில் புகுந்து நடந்த தாக்குதல்: பகீர் காட்சி | VAO Office | Madurai Usilampatti

VAO ஆபீஸில் புகுந்து நடந்த தாக்குதல்: பகீர் காட்சி | VAO Office | Madurai Usilampatti

மதுரை உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டி கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வருபவர் கவாஸ்கர். இவரிடம் மதுரை மேற்கு மாவட்ட பார்வட் ப்ளாக் கட்சி தலைவர் ஆதிசேடன் சான்றிதழ் கேட்டு அணுகி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் லெட்சுமி என்பவரும், பொட்டுலுபட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட பாப்பம்பட்டியில் வசித்து வரும் புஷ்பம் என்பவரும் ஒருவரே என சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் படி அப்படிப்பட்ட சான்றிதழ் வழங்க எனக்கு அதிகாரம் இல்லை என விஏஓ கவாஸ்கர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிசேடன் உன்னை அடித்தாலும் சட்டப்படி குற்றம் தானே என கூறிக்கொண்டே அடிக்க பாய்ந்துள்ளார். சம்பவம் குறித்து விஏஓ கவாஸ்கர் உசிலம்பட்டி போலீசில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை