வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அய்யோ,
சரியான ரௌடி கும்பல்
ரவுடிகளுக்கான ஒரு கட்சி. அதிகார போதையில் அத்துமீறும் கட்சி.
திருமாவளவனுக்கு ஏதாச்சுன்னா தமிழகமே இயங்காது: விசிக மிரட்டல் | VCK threat to Annamalai
சென்னை ஐகோர்ட் அருகே விசிக தலைவர் திருமாவளவன் காரில் சென்றபோது, பைக்கில் சென்ற ஒருவருடன், அவரது கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் திருமாவளவனுக்கு எதிராக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, வி.சி.க.,வினர், அண்ணாமலைக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். வி.சி நிர்வாகி ஒருவர், அண்ணாமலைக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த காட்சி வெளியானது. அதில், அந்த நபர் பேசியிருப்பதாவது, வாழ்க்கையை தொலைத்து, எங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார் திருமாவளவன். அவருக்கு ஏதேனும் ஒன்று என்றால், தமிழகமே இயங்காது. பா.ஜ.,வினர் ஓட்டு கேட்டு எங்கள் தெருவுக்கு தான் வர வேண்டும். ஊர் ஊருக்கு ஒருத்தராவது, வி.சி.,யை சேர்ந்தவர் இருப்பார். ஒருவராவது அண்ணாமலையை அடிப்பார். மதுரையில் பாஜவினர் ஒருவர் கூட வேஷ்டி கட்டி நடக்க முடியாது. திருமாவளவனை எதிர்த்து, நீ எங்கும் அரசியல் செய்ய முடியாது.
அய்யோ,
சரியான ரௌடி கும்பல்
ரவுடிகளுக்கான ஒரு கட்சி. அதிகார போதையில் அத்துமீறும் கட்சி.