இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கு விடிவு வந்திருக்கு | Vellagavi | Vellagavi Ration
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது வெள்ள கெவி மலை கிராமம். இங்குள்ள சின்னூர், பெரியூர் மலை கிராமங்களுக்கு பெரியகுளம் வழியாக தான் போக வேண்டும். தேனிக்கு அருகே இருந்தாலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவின் கீழ் வருகிறது. இரு மாவட்ட எல்லையில் இருப்பதால் அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கவில்லை. மலை கிராம மக்கள் பலமுறை திண்டுக்கல் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து சின்னூர், பெரியூருக்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் குடிநீர் வசதி, ரேஷன் பொருள் வாங்க மக்கள் சிரமப்படுகின்றனர். ரேஷன் பொருள் வாங்க மலை அடிவாரத்தில் உள்ள உப்புக்காடு,சின்னையா பாளையம் வர வேண்டும். அதுவும் 12 கிலோ மீட்டர் காட்டு பாதை வழியாக நடந்து வர வேண்டி உள்ளது. இது குறித்து திண்டுக்கல் கலெக்டர் சரவணன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சின்னூர், பெரியூர் மலை கிராம மக்களுக்கு அவர்கள் கிராமத்துக்கே ரேஷன் பொருள் கொண்டு சென்று விநியோகம் செய்ய உத்தரவிட்டார். இப்போது அடிவாரத்தில் இருந்து குதிரைகள் மூலம் ரேஷன் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. முதல் முறையாக தங்கள் கிராமத்துக்கே ரேஷன் பொருட்கள் கொண்டுவரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். Breath பிச்சை சின்னூர் மலைகிராமம்