உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற விசிக, சிபிஎம் வலியுறுத்தல்

வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற விசிக, சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2022 டிசம்பர் 26ல் சம்பவம் நடந்தது. வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 100க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. இறையூர் மற்றும் வேங்கைவலை சேர்ந்த சந்தேக நபர்கள் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. போலீசை விமர்சித்து வேங்கை வயல் மக்கள் பேனர் வைத்தனர். எதிர்கட்சிகளும் விமர்சித்து வந்த நிலையில், சிபிசிஐடி விசாரணையை முடித்து புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை