/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தின் புதிய டிஜிபி; யார் இந்த வெங்கடராமன்? | IPS Officer Venkatraman Appointed Acting DGP
தமிழகத்தின் புதிய டிஜிபி; யார் இந்த வெங்கடராமன்? | IPS Officer Venkatraman Appointed Acting DGP
தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்! டிஜிபி சங்கர் ஜிவால் இன்று விடைபெறுகிறார் title தமிழகத்தின் புதிய டிஜிபி; யார் இந்த வெங்கடராமன்? தமிழக சட்டம் -ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். பணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூவரில் ஒருவர் அடுத்த டிஜிபியாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தேர்வு நடைமுறை முடியாததால், பொறுப்பு டிஜிபியை நியமிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, நிர்வாகப்பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இன்று மாலை அவர் பதவி ஏற்க உள்ளார்.
ஆக 31, 2025