காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பரவிய வீடியோ | Video Call | Cyber Crime Police
தெலுங்கானாவின் நகிரேகல் தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வெமுல விரேஷ் உள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் அழைப்பு வந்தது. விரேஷ் அழைப்பை எடுத்தபோது வாட்ஸ் காலில் வந்த நபர் நிர்வாணமாகப் பேசினார். வீடியோ கால் என்பதால் விரேஷ் முகமும் அதில் தெரியும். அதனை ஸ்கிரீன் ரெக்கார்ட் முறையில் பதிவு செய்த மோசடி கும்பல் மிரட்டி பணம் கேட்டுள்ளது. கேட்கும் பணம் தராவிட்டால் வீடியோவை காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுப்பிவிடுவோம் என எச்சரித்துள்ளனர். ஒரு சில உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த வீடியோ பரவி இருக்கிறது. வீடியோ பார்த்த அவர்கள் எம்எல்ஏ வீரேஷை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நகிரேகல் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெரியாத எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம் என வீரேஷ் பொதுமக்களை எச்சரித்துள்ளார். அப்படியே மார்பிங் செய்து மிரட்டினாலும் பயப்பட வேண்டாம். பணமும் கொடுக்க வேண்டாம். தைரியமாக போலீசில் புகார் அளிக்கலாம். இப்போது போலீசார் விவரங்களை சேகரித்ததில் மத்திய பிரதேச சைபர் குற்றவாளிகள் என்னை மிரட்டியது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எம்எல்ஏ வீரேஷ் கூறினார்.