தேர்தல் அறிவிப்புக்கு முன் விஜய் போட்ட பிளான்: திமுக தந்த ஷாக் | Vijay Vellore Trip Postponed
த.வெ.க., தலைவர் விஜய், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நடத்தை அறிவிப்புக்கு முன், வேலுார், தர்மபுரி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், விஜய் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். வரும், 13ம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்திபன் தலைமையில் நிர்வாகிகள் கடிதம் வழங்கி உள்ளனர். அந்த கடித்தத்தில், சேலம், மகுடஞ்சாவடி சங்ககிரி பிரதான சாலையில், 2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தினார். அந்த இடத்தில் வரும், 13ல் த.வெ.க., தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, கூறியுள்ளனர். சேலத்துக்கு முன்பாக வேலுார் மாவட்டம், அகரம்சேரியில், வரும் 8ம் தேதி பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.