உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் லிஸ்ட்டில் இன்னும் பல புள்ளிகள் | TVK Vijay panaiyur meeting | Aadhav Arjuna | Nirmal Kumar

விஜய் லிஸ்ட்டில் இன்னும் பல புள்ளிகள் | TVK Vijay panaiyur meeting | Aadhav Arjuna | Nirmal Kumar

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் விஜய், முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி தனது பலத்தை நிரூபித்தார். ஏர்போர்ட்டுக்கு எதிராக பரந்தூரில் போராடும் மக்களை சந்தித்த பிறகு தனது கள அரசியல் துவங்கி விட்டதாக விஜய் அ்றிவித்தார். அன்று முதல் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறார். தமிழகம் முழுதும் 120 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் இப்போது இறங்கி உள்ளார். இன்னொரு புறம் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்கும் வேலையும் நடக்கிறது. பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக முக்கியமான 2 புள்ளிகளை இப்போது விஜய் தூக்கி இருக்கிறார். விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவை சேர்ந்த நிர்மல் குமார் தவெகவில் இணைவது உறுதியாகி விட்டது.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி