உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எல்லாத்துக்கும் காரணம் தடியடி... கரூரில் ஆவேசம் | karur stampede | pounraj arrest | tvk vijay update

எல்லாத்துக்கும் காரணம் தடியடி... கரூரில் ஆவேசம் | karur stampede | pounraj arrest | tvk vijay update

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நகர பொறுப்பாளர் பவுன் ராஜ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் பவுன்ராஜ் கைதுக்கு அவரது மனைவி ஐஸ்வர்யா, உறவினர்கள் மற்றும் தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பவுன்ராஜ் உடலில் சின்ன கீறல் விழுந்தாலும் போலீஸ்தான் காரணம் என்று ஆதங்கப்பட்டனர்.

செப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை