41536 பேர் ஓட்டு போடவில்லை | Vikravandi bypoll | Assembly constituency
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பதிவான ஓட்டுகள் எத்தனை? விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்தது. திமுகவின் அன்னூர் சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடந்தது. 276 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி பெற்று இருந்தனர். இதில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் ஓட்டு போட்டுள்ளனர். 41,536 பேர் ஓட்டு போடவில்லை. அதாவது 82.48 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையமான, பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன. 13ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.