மாந்திரீகத்தை நம்பிய மக்கள் மலைக் கிராமத்தில் நடந்த கொடூரம்
ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம், தொம்பிரிகுடா மலை கிராமத்தில் 15க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தை சேர்ந்த 60 வயதான அடாரி தொம்புரு என்பவர், மாந்திரிகம் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் மற்ற குடும்பத்தை விட, தொம்புரு குடும்பத்தின் பொருளாதார நிலை மட்டும் நல்ல நிலையில் இருந்துள்ளது. இதனால், மற்ற குடும்பத்தினர் அவர் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களது பொருளாதார நிலை மோசமாக இருப்பதற்கு அடாரி தொம்புரு செய்யும் மாந்திரீகமே காரணம் என மற்றவர்கள் நம்பினர். தொம்புரு, அடிக்கடி வெளியூர் சென்று மாந்திரீகம், செய்வினை கற்று வந்து தங்களது பொருளாதார நிலை உயர விடாமல் தடுப்பதாக மற்ற குடும்பத்தினர் நம்பினர். இதனால், ஆத்திரம் கொண்ட கிராம மக்கள் ஒன்றுகூடி, அடாரி தொம்புரு வீட்டுக்கு சென்று, அவரை வெளியில் இழுத்துபோட்டு கற்கள், கட்டை உள்ளிட்டவற்றால் கடுமையாக தாக்கினர். அத்துடன் விடாமல், பாட்டிலில் கொண்டு சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி உயிருடன் எரித்தனர். கதறி துடித்த தொம்புரு அங்கேயே இறந்தார்.