/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு ஏசி பஸ்சிலும் கொட்டும் மழை அருவி: பயணிகள் அவஸ்தை | Villupuram AC bus | Government bus rainwater
அரசு ஏசி பஸ்சிலும் கொட்டும் மழை அருவி: பயணிகள் அவஸ்தை | Villupuram AC bus | Government bus rainwater
தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி பழுதாகிறது. குறிப்பாக பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பஸ்கள் ஓட்டை உடைசல்களுடன் உள்ளன. கூரைகள் பழுதாகி மழைக்கு ஒழுகும் நிலையே இருக்கிறது. சில பஸ்களில் இருக்கைகள் உடைந்தும், படிக்கட்டுகளில் இரும்பு கம்பிகள் பிடிமானம் இல்லாமலும் உள்ளன. அந்த கம்பியை நம்பி பிடித்து இறங்கினாலோ, ஏறினாலோ பயணிகள் கீழே தவறி விழும் நிலை உள்ளது. இதுபோன்று அச்சத்துடனேயே பயணிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அக் 17, 2025