உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 15 நாட்களுக்கு மேலாக வடியாத வெள்ளம்: பகீர் காட்சிகள் | Drone Shot | Viluppuram Rain

15 நாட்களுக்கு மேலாக வடியாத வெள்ளம்: பகீர் காட்சிகள் | Drone Shot | Viluppuram Rain

வீட்டை சுற்றியும் நான்கு அடிக்கு மேல் வெள்ளம். நீரில் மிதக்கும் விஷ ஜந்துக்கள். இரவானால் கொசுக்கடி. குடலை பிடுங்கும் நாற்றம். பெஞ்சல் புயல் கடந்து சென்று 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர் இந்த பகுதி மக்கள். பெஞ்சல் புயலின் போது பெய்த கனமழையால் விழுப்புரத்தில் வீடுகளிலும், விளைநிலங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. இப்போது எல்லா இடங்களிலும் வெள்ளம் வடிந்து இயல்புநிலைக்கு திரும்பிவிட்டாலும் லிங்கம் நகர், பாலாஜி நகர், நேதாஜி நகர், கணபதி நகர், திருவேங்கடம் நகரில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. வீடுகளை சுற்றி 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் இந்த பகுதியில் உள்ள மக்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. விழுப்புரம் நகராட்சி சார்பில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ