/ தினமலர் டிவி
/ பொது
/ வினேஷ் போகத்துக்கு பதக்கம்! நீடிக்கிறது காத்திருப்பு | Vinesh Phogat | CAS Verdict Delayed
வினேஷ் போகத்துக்கு பதக்கம்! நீடிக்கிறது காத்திருப்பு | Vinesh Phogat | CAS Verdict Delayed
நாடே எதிர்பார்த்த தீர்ப்பு 3வது முறை ஒத்தி வைப்பு! பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தத்தில் பிரீஸ்டைல் 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறினார். போட்டிக்கு முன்னதாக வீராங்கனைகளின் எடை சோதிக்கப்பட்ட போது 100 கிராம் கூடுதலாக இருந்ததால் சர்வதேச மல்யுத்த சங்கம் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது. வெள்ளி அல்லது தங்கப்பதக்கத்துடன் அவர் தாயகம் திரும்புவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இது இந்திய ரசிகர்களை சோகத்தில் தள்ளியது. தகுதி நீக்கத்தை எதிர்த்து கோர்ட் ஆர்பிட்ரேசன் ஆப் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் மேல்முறையீடு செய்தார்.
ஆக 13, 2024