உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளியில் HM செய்கை: கண்கலங்கி நின்ற மாணவர்கள் | Govt School Headmaster | Andhra Pradesh | minister

பள்ளியில் HM செய்கை: கண்கலங்கி நின்ற மாணவர்கள் | Govt School Headmaster | Andhra Pradesh | minister

சார்.. அப்படி பண்ணாதீங்க சார்..! அதிர்ந்துபோன மாணவ, மாணவிகள் பள்ளியில் பரபரப்பு ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் ரமணா. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் சோபிக்கவில்லை. பரீட்சையில் மிகக்குறைவான மார்க்கே வாங்கினர். பலமுறை மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ரமணா அறிவுரை கூறிய மாணவர்களின் மார்க் கூடவில்லை. இந்தச்சூழலில்தான் பிரேயர் மீட்டிங்கில் அந்த காரியத்தை செய்தார். மாணவர்கள் அனைவரும் வேண்டாம் சார்; அப்படி பண்ணாதீங்க சார்.. போதும் சார்...என கோரசாக குரல் எழுப்பினர். ஆனாலும் தலைமை ஆசிரியர் தன் நிலைப்பாட்டை மாற்றவில்லை. 40 தோப்புக்கரணம் போட்டு தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டார். நீங்க நல்லா படிக்கலன்னா உங்க வாழ்க்கைதான் கெட்டுப்போகும்; ஆனாலும் உங்களை அடிச்சோ, திட்டியோ திருத்த முடியாத நிலையில நாங்க இருக்கோம். உங்களுக்கு இன்னும் நல்லா சொல்லித் தர்றோம்; இனியாவது நல்லா படிக்க முயற்சி பண்ணுங்க உங்க மார்க் குறைஞ்சதுக்காக என்னை மன்னிச்சிடுங்க என உருக்கமாக சொல்லி மொத்த மாணவர்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து மன்னிப்பு கேட்டார். வீடியோ சமூகவளைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் நெகிழ்ந்து போனார். இப்படித்தான் ஆசிரியர்கள் இருக்கணும்; பிள்ளைகள் படிக்காவிட்டால் தன்னையே தண்டித்துக் கொண்ட ரமணா போன்ற ஆசிரியர்களால் நமது மாநில அரசு பள்ளிகள் எதிர்காலத்தில் சாதிக்கும்; ரமணாவைப்போல மற்ற ஆசிரியர்களும் குழந்தைகளை ஊக்குவித்து அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என நாரா லோகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை