பவுன்சர்களா... ரவுடிகளா! TVK ஆபிஸ் வாசலில் பகீர் Viral video |KAS joining tvk| tvk bouncers video
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். முன்னதாக தனது காரில் பனையூர் தவெக அலுவலகம் வந்திருந்தார். அலுவலகத்துக்குள் அவர் செல்வதை போட்டோ, வீடியோ எடுக்க ஏராளமான பத்திரிகை மற்றும் டிவி நிருபர்கள், கேமராமேன்கள் வந்திருந்தனர். அவர்கள் செங்கோட்டையன் வந்ததும் போட்டோ, வீடியோ எடுத்தனர். திபுதிபுவென வந்த தவெக பவுன்சர்கள், பத்திரிகையாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அவர்களை வேலை செய்ய விடாமல் கடுமையாக தள்ளி தாக்கினர். இதில் பத்தரிகையாளர் ஒருவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் பவுன்சர்களுடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். சமாதானம் செய்ய வந்த தேர்தல் பிரசார பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம், ‛இவர்கள் எல்லாம் பாடிகார்டா இல்ல ரவுடிங்களா என்று ஆவேசமாக கேட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.