கூமாபட்டி பிரபலம் தங்கபாண்டி மருத்துவமனையில் அட்மிட் |Virudhunagar |Koomapatty| Koomapatty Viral
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி, அவரது ஊரை பற்றி இன்ஸ்டா ரீல்ஸ் போட்டு பிரபலமானார். நேற்று சென்னையில் தனியார் தொலைக்காட்சி படபிடிப்பை முடித்துவிட்டு தன் சொந்த ஊருக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தார். நள்ளிரவு பஸ் நிறுத்தப்பட போது இயற்கை உபாதைக்காக இறங்கி உள்ளார், அப்போது வேகமாக பிரேக் பிடித்து பஸ் கதவு தங்க பாண்டி கையில் மோதியதாக கூறப்படுகிறது. இடது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். பஸ் டிரைவர் முருகேசன் தன்னிடம் கடினமாக நடந்து கொண்டதாக தங்கபாண்டியன் போலீசில் புகார் அளித்துள்ளார். பஸ்சில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.