உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூடப்படாத சாலை பள்ளத்தால் சாத்தூரில் பரபரப்பு சம்பவம் | Roadside ditch | Women fell down with child

மூடப்படாத சாலை பள்ளத்தால் சாத்தூரில் பரபரப்பு சம்பவம் | Roadside ditch | Women fell down with child

மழைநீர் மூடிய சாலை பள்ளத்தில் குழந்தையுடன் விழுந்த பெண்கள் வைரலாகும் வீடியோ விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறையினரால், வாறுகால் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், பேவர் பிளாக் பதித்தல் பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. இதனால் சாத்தூர் நகரில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பெய்யும் மழையால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மதுரை பஸ் ஸ்டாப் அருகே கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற 3 பெண்கள் மழைநீரால் நிரம்பி இருந்த பள்ளத்தில் அடுத்தடுத்த விழுந்தனர். குழந்தைகளுடன் கொட்டும் மழையில் சாலையில் விழுந்தவர்களை அருகில் இருந்தவர்கள் பதறியடித்து ஓடிச் சென்று மீட்டனர். இவர்களை போல் இரவு நேரத்தில் முதியவர் ஒருவரும் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !