அமெரிக்க அரசு ஊழியர்களை அலறவிட்ட விவேக் ராமசாமி
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 20ல் அவர் பதவியேற்க உள்ளார். சமீபத்தில், தன் நிர்வாகத்தில் இடம்பெறுபவர்கள் குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதன்படி டி.ஓ.ஜி.இ., எனப்படும் அரசு செயல்திறன் துறையை உருவாக்கிய அவர், அதன் தலைவர்களாக தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோரை நியமித்தார். இந்த துறை வெளியில் இருந்து, அரசுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் என டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
நவ 17, 2024