கேட் பூட்டை உடைத்து வெளியேறிய ஊரிசு கல்லூரி மாணவர்கள் | Voorhees college | Students protest | VP
பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி துணை முதல்வர் ஒன்று திரண்ட மாணவர்கள் வேலூரில் பழமைவாய்ந்த ஊரீசு கல்லூரியின் துணை முதல்வராக இருப்பவர் அன்பழகன். இவர், இதே கல்லூரியில் பணியாற்றும் பெண் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அந்த விரிவுரையாளர் வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் துணை முதல்வர் அன்பழகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் அன்பழகன் தலைமறைவாகி உள்ளார். புகார் அளித்து ஒரு வாரமாகியும் இன்னும் அன்பழகன் கைதாகாததால் ஆத்திரமடைந்த ஊரீசு கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டம் செய்தனர். கேட் பூட்டை திறந்து கல்லூரியை விட்டு வெளியேற முயன்ற மாணவர்களை பேராசிரியர் ஒருவர் எவ்வளவோ தடுக்க முயன்றார்.