உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனைவி கண் முன்னே நடந்த பயங்கர சம்பவம்

மனைவி கண் முன்னே நடந்த பயங்கர சம்பவம்

சென்னை வியாசர்பாடி, உதயசூரியன் நகரை சேர்ந்தவர் ரவுடி தொண்டை ராஜ். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 15க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு மாதத்திற்கு முன்புதான் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்திருந்தார். இவர், மனைவியுடன் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை 2 பேர் அரிவாளுடன் வழிமறித்தனர். ராஜ் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடியுள்ளனர். விரட்டி சென்ற இருவர் அவரை சரமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தொண்டை ராஜ், மனைவி கண் முன்னே துடிதுடித்து இறந்தார்.

ஏப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ